இணைய நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கர ஆண்டினை கரம் குவித்து கரகோஷத்தோடு வரவேற்போம் அகில்,ஆகாஷ்,கோமதி & ஸ்ரீதர் ரத்தினம்
If I can stop one heart from breaking,I shall not live in vain; If I can ease one life the aching,Or cool one pain, Or help one fainting robin, Into his nest again, I shall not live in vain. Emily Dickinson
நந்தன ஆண்டில் செல்வம் தருபவர்:நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சுக்கிரன், நந்தன புத்தாண்டின் ராஜாவாக விளங்குகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் புத்தாண்டு செல்வ வளம் மிக்கதாக அமையும். கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில் அம்பிகைக்கே சக்தி அதிகம். மதுரையில் மீனாட்சி, சுவாமிக்கு வலப்புறம் இருப்பது போல், இங்கும் கற்பக நாயகி, சுவாமியின் வலப்புறம் இருக்கிறாள். பிரம்மாவுக்கு சுவாமியும், அம்பிகையும் திருமணக்காட்சி கொடுத்த இடம். இங்கு வழிபட்டவர்க்கு விரைவில் மணவாழ்வு கிடைக்கும். மற்ற கோயில்களில் அம்பாள், சுவாமியை வேண்டி, திருமணம் செய்ததாக வரலாறு இருக்கும். இங்கே சுவாமி, அம்பிகையை வேண்டி திருமணம் செய்து கொண்டார். எனவே, ஆண்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதாக நம்பிக்கை. மானக்கஞ்சாற நாயனார் இத்தலத்தில் பிறந்தவர். இறைவனுக்காக புதுப்பெண்ணான, தன் மகளின் கூந்தலையே அறுத்து கொடுத்து சிவனருள் பெற்றவர் இவர். சுக்கிரனின் கதை: அந்தகாசுரன் என்பவன் தேவர்களை துன்புறுத்தினான். எனவே, தேவர்கள் அவனை அழிக்க முற்பட்டனர். அசுரர் தரப்பில் உயிர்ச்சேதம் கடுமையாக இருந்தது. அப்போது அசுரர்களின் குருவாக இருந்த பார்க்கவ முனிவர், சிவபெருமானை நோக்கி தவமிருந்து சஞ்சீவி மந்திர வரம் பெற்றார். இவ்வரம் மூலம் இறந்த அசுரர்களை பிழைக்க வைத்தார். அவர்களது அட்டகாசம் அதிகரித்தது. தேவர்கள் சிவனை சரணடைய, சிவன் பார்க்கவரை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற பார்க்கவர், அங்கும் தவமிருந்தார். வயிற்றுக்குள்ளேயே கிடந்ததால் அவரது உடல் வெள்ளை ஆயிற்று. எனவே அவர் சுக்கிரன் (வெள்ளையன்) எனப்பட்டார். தவத்தின் வலிமையால் சிவனருள் பெற்று வயிற்றில் இருந்து மீண்டார். மீண்டும் அசுர குருவானார். மகாபலி மன்னனுக்கு குருவாக இருந்து, விஷ்ணுவால் ஒரு கண்ணை இழந்தார். காசிக்கு சென்ற இவர் விஸ்வநாதரை வழிபட்டு, நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார். கஞ்சனூர் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது. அனைத்து செல்வமும் அருள்பவர்களாக அக்னீஸ்வரரும், கற்பகநாயகியும் விளங்குகின்றனர்.