You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / பெருவுடையாருக்கு மருத்துவம் செய்த சித்தர் கருவூரார் - U.S. ஆனந்த்
பெருவுடையாருக்கு மருத்துவம் செய்த சித்தர் கருவூரார் - U.S. ஆனந்த்
பெருவுடையாருக்கு மருத்துவம் செய்த சித்தர் கருவூரார்
U.S. ஆனந்த்
பொன்னியின் செல்வர் ௲ இராஜராஜ சோழர் இம்மாபெரும் மன்னனின் ஆத்மகுரு - கருவூரார் எனப்படும் கருவூர்ச் சித்தர் பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்.
கருவூரார் கரூரைச் சேர்ந்தவர் வெண்கலம், பித்தளை, தரா, தாம்பிர வேலை செய்யும் விசுவகன்மா மரபினர். இவரின் குரு போகர் என்று இவரின் பாடல் வாயிலாக அறிகிறோம்.
இவர் சமாதி அடைந்த இடம் கூறுகையில் இரு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. சில நூலாசிரியர் கருவூரிலேயே சமாதி கூடியுள்ளார் என்றும்,சிலர் காளாஹத்தியில் சமாதி பெற்றார் என்றும் கூறீயுள்ள்னர்.
பொன்னியின் செல்வருக்கு கருவூரார் குருவாக, உறுதுணையாக நின்று சைவம் பரப்பும் பெருஞ்சீலராக இருந்தார்.
தஞ்சைப் பெரியகோயில் பெருவுடையாரை சிவாச்சாரியார்கள் பிரதீஷ்டை செய்து மருந்தை சாத்தி பந்தனம் செய்தார்கள். மருந்து பந்தனம் ஆகவில்லை. அரசர் முதல் அனைவரும் கலங்கி நின்ற போது பொன்மணித் தட்டார் என்ற சிவயோகி கருவூர்ச் சித்தரை வரவழைத்தார். இவரும் ஆவுடையாரைச் சுற்றி மருந்து சாத்தினார். அதுவும் பந்தனமாகவில்லை. உடனே, தன் எச்சில் தாம்பூலத்தை உமிழ்ந்து பந்தனம் செய்தார். காண்போர் கண்கள் வியப்புற மருந்து இளகி பந்தனம் ஆயிற்று. கருவூர்ச்சித்தரின் சித்தமருத்துவ மகிமையை உலகிற்கு உணர்த்தவேண்டி இறைவன் ஆடிய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று போலும்.
இந்நிகழ்வு, இராஜராஜன் அருகில் நிற்க, கருவூரார் மருந்து இடித்து பந்தனம் செய்யும் காட்சி உட்பிரகாரத்தில் சிறப்பான காட்சியாக, சாட்சியாக உள்ளது.
கருவூர்ச்சித்தர் பல தல தரிசன்ம் செய்துள்ளார். ஒரு சமயம் இவர் திருநெல்வேலி சென்று நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் தரிசித்துவிட்டு மானூரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு அப்பரும், அம்மையும் நடனக்காட்சியைக் காட்டி அருளியதாக நெல்லை தல புராணம் கூறுகிறது. அந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
கருவூரார் திருவிசைப்பா பாடிய ஒன்பது பேர்களுள் ஒருவர். திருக்கோயில் வழிபாட்டிற்கென தனி மதிப்பு கொடுக்கும் வகையில் பத்து சதலங்களின் சிவ மூர்த்தங்களைத் துதிக்கும் 103 பாடல்கள் இயற்றியுள்ளார் அவற்றுள் இராஜராஜேச்வரம் குறிப்பிட்த்தக்கது.
” உலகெலாந் தொழு வந்தெழு கதிர்பரிதி
ஒன்று நூறாயிரங் கோடி
அலகெலாம் பொதிந்த திருவிடம்பச்சோ
அங்ஙனே அழகிதோ வரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர் வெந்திங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சி வழ் தஞ்சை
இராசராசேச் சரத்திர்க்கே”
இவர் சித்த மருத்துவத்திற்கென நிறைய நூல்கள் இய்ற்றியுள்ளார். அவற்றுள்,
1. கருவூரார் வாதகாவியம்
2. கருவூரார் பலதிரட்டு
3. கருவூரார் அட்டகன்ம்ம் நூறு
4. கருவூரார் பூசா விதி போன்றவை குறிப்பிட்த்தக்கவை.
கருவூர்த் தேவர்க்கென தஞ்சைப் பெரிய கோயிலின் மேல் பிரகாரத்தில் மத்தியில் தனி கோயில் உள்ளது. வியாழன் தோறும் இவரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அவரின் மகிமையை இன்றும் நமக்கு உணர்த்துகிறது



