You are herePonniyin Selvan Varalaatru Peruvizha Souvenir 2009 / நாகபட்டினம் அகழாய்வு - முனைவர் பா.செயக்குமார்

நாகபட்டினம் அகழாய்வு - முனைவர் பா.செயக்குமார்


By humble - Posted on 24 February 2010

நாகபட்டினம் அகழாய்வு

முனைவர் பா.செயக்குமார்

சங்ககால காவிரிப்பூம்பட்டினத்திற்குப் பிறகு சோழ மண்டலக் கடற்கரையில் தமிழகக் கடற்சார் வரலாறு மற்றும் பண்பாட்டின் தொன்மைச் சிறப்புக்களுடன் விளங்கிய நாகபட்டினத்தில் ( நீதிமன்ற வளாகம், வெளிப்பாளையம்) கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மே மாதம் 2 முதல் 24 வரை இந்தியத் தொல்லியல்

22-Jayakumar-Nagai01

அகழாய்வுக் குழி, நாகை

23-Jayakumar-Nagai02

சீனப் பானையோடுகள்

24-Jayakumar-Nagai03

பௌத்த மதக் குறியீடுகளுடன் அரிதான பானையோடுகள்

25-Jayakumar-Nagai04

ரோமானிய / அரேபியப் பானையோடுகள்

அளவீட்டுத் துறையின் நல்கை உதவியுடன் அகழாய்வினை மேற்கொண்டது நாகபட்டினத்தில் இதுவே முதல் தொல்லியல் அகழாய்வு ஆகும்.

மக்கள் வாழ்விடப் பகுதியில் 4 X 4 மீட்டர் பரப்பளவில் அகழாய்வுக் குழி அமைககப்பட்டது. கன்னி மண் காணப்படும் 3.35 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டது. இதில் மொத்தம் ஏழு வகையான மண் அடுக்குகள் காணப்பட்டன. இதில்¤ முதல் இரண்டு மண் அடுக்குகள் தற்காலப் படிவுகளாக ஏறக்குறைய 150 ஆண்டுகள் பழமையானதாகும்.

மூன்றாவது முதல் ஐந்தாவது மண் அடுக்கு வரை அய்ரோப்பியர்களின் குறிப்பாக டச்சுக்காரர்களின் வாழ்விடம் இருந்தமைக்கான கட்டிடப் பகுதிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக 17(53) என ஆண்டு பொறிக்கப்பட்ட நாணயம், மென்மையான , வழவழப்புக் கொண்ட வெண்மை நிற களிமண்ணால் ஆன புகைப்பிடிப்பான்கள், சீனக் களிமண் வகை (Chinese Porcelain) மட்கலச் சில்லுகள் குறிப்பாக அவற்றில் காணப்படும் தமிழக மரபுசார் படகுகள் போன்றவை கி.பி. 16 முதல் 19ம் நூற்றாண்டு வரை இங்கு அய்ரோப்பியர்களின் செல்வாக்கு இருந்தமைக்குச் சான்றாகும்.

ஆறாவது மண்ணடுக்கு 1மீ முதல்¤ 2.60 மீட்டர் வரை ஒரே தன்மையுடையதாகவும் பிற மண்ணடுக்குகளைக் காட்டிலும் அளவில் பெரியதாகவும் காணப்படுவதோடு முழுவதும் சோழர் கால எச்சங்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம் மண்ணடுக்கோடு தொடர்புடைய எச்சங்களாக 'ஸ்ரீராஜராஜா' என தேவநாகரி எழுத்துப் பொறிப்புடன் செம்பு நாணயம் (அகழாய்வில் கிடைப்பது இதுவே முதன்முறை) மற்றும் பழுப்புநிற சீனக் களிமண் மட்கலவகையைச் சார்ந்த சில்லுகள் பல கிடைத்திருப்பது கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.14-15ஆம் நூற்றாண்டு வரை சீனா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளுடன் நாகபட்டினம் கொண்டிருந்த உறவுக்குச் சான்றுகளாகும்.

சைலேந்திர மரபினைச் சேர்ந்த ஸ்ரீவிசய மன்னன் ஸ்ரீமாறவிசயோத்துங்கவர்மன் சோழர் காலத்தில் கட்டியதாக ஆனைமங்கலம் செப்பேடுகள் குறிப்பிடும்¤ முழுதும் செங்கற்களாலான புத்தவிகாரைகளில் (ஸ்ரீ ராஜராஜப் பெரும்பள்ளி, ஸ்ரீ சூலாமணிவர்மப் பெரும்பள்ளி) ஒன்றின் அடிப்பகுதி 1.85 மீ முதல் 3மீ ஆழம் வரைகாணப்படுவதும் இதனோடு அக்காலத்தில் பயன்படுத்திய மட்கலங்களின் சில்லுகள், கூரை ஓடுகள் கிடைத்திருப்பதும் அம்மண்ணடுக்கு சோழர் காலத்தியது என்பதை தௌ¤வாக்குகிறது. இவற்றோடு காணப்படும் பிற தொல்பொருட்களில் குறிப்பாக புத்தமதம் சார்ந்த குறியீடுகள் பல பானைஓடுகளில் கிடைத்திருப்பது (இதுபோன்று இதுவரை எங்கும் கிடைக்கவில்லை) அச்சமயம் இங்கு சிறப்பாக நிலவியிருந்தமையை தௌ¤வாக்கும் அரிதான எச்சங்களாகும்.

மூன்று மீட்டர் ஆழத்திற்கு கீழே அதாவது ஏழாவது மண்ணடுக்கில் பல்லவர் காலத்து மண்பாண்டச் சில்லுகளும் அவற்றில் ஒன்றில் "கா" என்ற தமிழ் எழுத்தும் காணப்பட்டமை சிறப்புக்குரியதாகும். எழுத்து கீறப்படாமல் முத்திரை குத்தப்பட்டது போன்று உள்ளது. எழுத்தமைதியில் பல்லவர் காலமாகக் (கி.பி. ஆறாம் நூற்றாண்டு) கொள்ளலாம். மேலும் இதை 'கர்' என வாசிப்பதும் பொருத்தமானதாக இருக்கும். அவ்வாறெனில் 'நாகர்' அல்லது 'நாகானனம்' (நாகர் + அனனம்) என்னும் பெயர்களோடு தொடர்புபடுத்தலாம். இம் மண்ணடுக்கில் 3.20 மீட்டர் முதல் 3.35 மீட்டர் வரை இரும்புக்காலம

அல்லது சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் முழுவதும் கருமை நிறம் உடைய பானை ஓடுகள் காணப்பட்டன. இவற்றோடு ரோமானிய பானை ஓடுகளும் கிடைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடற்பயணி தாலமி (கி.பி.1ஆம் நுற்றாண்டு) ' நிகம' எனச் சுட்டுவதை இங்கு நினைவுகூறல் தகும்.

மேற்சுட்டிய மண்ணடுக்குகளோடு தொடர்பில்லாததாக இருந்தாலும் சோழர்கால மண்ணடுக்கின் கீழ் நிலையில் புதிய கற்காலக் கோடரி சரிபாதியாக உடைந்த நிலையில் கிடைத்திருப்பது இப்பகுதியில் புதிய கற்காலப் பண்பாடும் நிலவியிருந்ததைக் காட்டுவதோடு அக்கற்கருவியை பிற்காலத்திய மக்களும் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் புலப்படுத்துகிறது.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் அய்ரோப்பியர் காலம் முதல் சங்க காலம் வரையிலான பண்பாட்டுப் படிநிலைகளை முதல்முறையாக வெளிக்கொணர்ந்த சிறப்பு இந்த அகழாய்விற்கு உண்டு. சோழப் பேரரசன் முதல் இராஜராஜனின் பெரிய ஆனைமங்கலச் செப்பேடு (கி.பி.1006) " உலகத்திற்கே திலகமாக விளங்கும் நாகபட்டினமான சோழகுலவல்லி பட்டினம்" எனக் குறிப்பிட்டுள்ளமை இவ்வகழாய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

About

Dr. P.Jayakumar completed Ph.D. from Tamil University. He worked as lecturer in Dept of Ancient history and Archaeology Madras University. He had participated in the excavations at Kodumanal, Palur, Mayiladumparai, Mel Sittamur and Guttur. He is currently the H.O.D - Epigraphy and Archaeology, Tamil University. He directed the excavations at Nagapattinam. His book Tamizhaka Turaimukankal received the best book award from Tamil Nadu Government for the year 2001. He has published four books and several research articles.

Visitor Map

Locations of visitors to this pagecounter for wordpress

Navigation