விசாகப்பட்டினம் வருகை தரும் திருவள்ளுவர்
  • 2013 இல் திருவள்ளுவர் விசாகப்பட்டினத்துக்கு வருகை தர உள்ளார். விருந்தாளியாக
    அல்ல. இங்கேயே இருந்துவிடும் உத்தேசத்துடன்.

    தமிழ்க் கலை மன்றக் கட்டிடத்தின் வாசலில் ஆறு அடி உயரத்தோடு கால் கடுக்க
    திருவள்ளுவரை நிற்க வைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி தமிழறிஞர் டாக்டர் பத்மநாபன் ஆலோசனையின் பேரில் திரு வி.ஜி.
    சந்தோசம் அவர்கள் திருவள்ளுவர் சிலையை விசாகப்பட்டினத்துக்கு
    அனுப்புகிறார்கள். வருகிற ஜனவரி 20 ஆந்தேதி தமிழக ஆளுநர் திரு ரோசையா
    தலைமையில் (அவர் ஒப்புக்கொண்டுள்ளார்) பல அரசியைல் தலைவர்கள் , பல
    தமிழறிஞர்களின் முன்னிலையில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட இருக்கிறது. விழாவை
    முன்னிட்டு திருக்குறள் பேரவை ஏற்பாடு செய்யப்படுகின்றது.

    ஸ்டெல்லா மேரி கல்லூரி தமிழ்ப்பேராசிரியை திருமதி உலகநாயகி தலைமையில் சுமார்
    முப்பது பேராசிரியர்கள் குழு - அதில் - 27 பேர் மகளிர்- திருக்குறள் பற்றிய
    அமர்வுகளில் பங்கு கொள்கிறார்கள். மேலும் நாற்பது தமிழ் அறிஞர்கள் கொண்ட குழு
    ஒன்று இந்த விழா நிமித்தம் தமிழகத்திலிருந்து விசாகப்பட்டினம் வர இருக்கின்றது.

    விசாகை தமிழ்க் கலைமன்றம் 2003 ஆம் ஆண்டில் நூறாவது ஆண்டினை நிறைவு செய்து
    மாபெரும் விழா கொண்டாடியது. மன்றத்தின் 110ஆம் ஆண்டு விழாவும் மிகப் பெரிய
    வெற்றி விழாவாக நடைபெற இங்குள்ளோர் அனைவரும் வாழ்த்திட வேண்டுகிறேன்.

    விழாவைப் பற்றிய பிற தகவல்கள் அவ்வப்போது இந்த இழையில் கொடுக்கலாம்
    என்றிருக்கிறேன்.

    அன்புடன்
    திவாகர்
  • [image: Inline image 1]

    எங்கள் விசாகையில் நிரந்தரமாகக் குடியேற வரும் திருவள்ளுவர் இப்படித்தான்
    இருப்பார்.

    அன்புடன்
    திவாகர்
  • [image: Inline image 1]

    மேலே காண்பதுதான் தமிழ்க் கலை மன்றக் கட்டடம். மின்சாரக் கம்பத்தை இப்போது
    இங்கிருந்து பெயர்த்தெடுத்து விட்டோம். அதன் பின் பகுதியில்தான் திருவள்ளுவர்
    சிலை நிறுவப்பட உள்ளது.

    விசாகை தமிழ்மன்றத்தின் நூறாண்டு நிறைவு விழாவினை ஒட்டி எழுந்த கனவின் நனவே
    இந்தக் கட்டடம். பலர் உழைப்பில் உருவானது. 2003 ஆம் ஆண்டில் நூறாவது ஆண்டு,
    2005ஆம் ஆண்டில் இந்தக் கட்டடம் திறக்கப்பட்டது. நிலம் ஆந்திர அரசாங்கத்தால்
    (இலவசமாக அல்ல, குத்தகை ஒப்பந்த அடிப்படையில்) வழங்கப்பட்டது. கட்டடம் கட்ட்
    ஆன செல்வுகள் 30 லட்சத்துக்கு மேலே.. ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சங்கத்தின்
    நிதிக் கையிருப்பு சுமார் 30,000 ரூபாய். கட்டடம் எழும்ப எழும்ப நிதி
    திரட்டிக் கொண்டே இருந்தோம்.. எந்த நிலையிலும் கட்டடப் பணி நிதிக்குறைவினால்
    ஒரு நாள் கூட நிறுத்தப்படவில்லை. கீழ்த்தளத்தில் யோகா வகுப்புகள், நடுத்தளம்
    குளிசாதன வசதியுடன் மேடையுடன் கூடிய மண்டபமாகக் கட்டப்பட்டது. 150 பேர்
    அமரலாம். மேலே வசதிகளுடன் கூடிய இரண்டு தனி விருந்தினர் அறைகள், பாதுகாப்பாக
    வெளியே ஒரு ரேழி இவைகளோடு தமிழ் மன்றக் கட்டடம் இன்று நிமிர்ந்து நன்னடை
    போடுகின்றது..

    கட்டட நிதி திரட்டும் விஷ்யத்தில் திரு சம்பத் அவர்களின் அயராத பணிக்கு ஈடு
    இணை கிடையாது. ஒரு கட்டத்தில் என்னையும் திரு சம்பத் அவர்களையும் கண்டால்
    இங்கே சிலர் ஓடக் கூட தயாராக இருந்தார்கள் - எங்கே கையேந்தி விடுவோமே என.

    விளையாட்டாக ஓடிப் போய் விட்டது. தமிழர்களுக்கென தனியான ஒரு கட்டடம்
    ஆந்திரத்திலேயே விசாகப்பட்டினத்தில்தான் உள்ளது. கட்டடம் பிற்காலத்தில்
    கவரப்படவிடக்கூடாது என்பதற்காக கட்டடத்தின் உச்சியில் கோபுர வடிவத்தில்
    செதுக்கி வைத்தோம். கோபுரம் தமிழகக் கலையின் அடையாளம் (ஏற்கனவே 1903 இலிருந்து
    சொந்தமாக இருந்த தமிழ்ச்சங்க கட்டடம் காலத்தின் கோலத்தில் அடையாள ரேகைகள்
    அழிக்கப்பட்டு கை மாறிப்போனது ஒரு சோகக் கதை). இப்போது திருவள்ளுவர் சிலையும்
    சேர்ந்து கொள்கிறது. திருவள்ளுவர் தமிழின் அடையாளம்.. காலாகாலத்துக்கும்
    தெரியும் அடையாளம்.. கோவில் கோபுர வடிவமும் திருவள்ளுவரும் இருக்கும் வரை
    எதிர்காலத்திலும் கட்டடம் தமிழர்களிடத்தில்தான் இருக்கும் என்ற நம்பிக்கை
    பலமாக எழுந்துள்ளது.

    ராவணனோ, வீடணனோ யார் ஆண்டாலும் விசாகப்பட்டின தமிழ்ச்சங்கம் அழியாது என்ற
    எண்ணமும் பலமாக எழுந்துள்ளது.

    திவாகர்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters