Thirumurai Koorum Marai,Vedam, Velvi -1 - Thirumurai's on Bhakthi, Thirumandiram
  • We have recently read an article stating that the Vedas of Tamil are different according to thirumaurai and the four vedas are marais mentioned in Tamil are actually "Aram, Porul, Inbam, veedu ( dhrma, Artha, kama, moksha) and the Yagas are later additions to Tamil culture.

    This
    article is to highlight what Thirumurais say and how the Thirumurais place importance to Vedas/velvis. Also Thirumurai dont discriminate anyone on caste basis and devotion to Siva is Supreme. hence i am first quoting Thirumurai emphasising on devotion, then what these thirumurais which give such emphasis on devotion and Tamil say about
    Vedas and
    vediyars.span>

    சாத்தி
    ரம்பல
    பேசுஞ்
    சழக்கர்காள்
    கோத்தி ரமுங்
    குலமுங்கொண் டென்செய்வீர்
    பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
    மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே. (5-60-3)

    பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
    இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
    எட்டு மொன்று மிரண்டு மறியிலென்
    இட்ட மீச னெனாதவர்க் கில்லையே.( 5-99-3,4,5)

    பட்டர் ஆயினும், சாத்திரங்கள் பல கேட்பினும்விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம்.

    வேத மோதிலென்
    வேள்விகள் செய்யிலென்
    நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
    ஓதி யங்கமோ ராறு முணரிலென்
    ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே.

    காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
    வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
    ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
    ஏல ஈசனென் பார்க்கன்றி யில்லையே.


    -குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்
    துவர்ப்பெருஞ் செருப்பா
    னீக்கித்
    தூயவாய்க் கலச மாட்ட
    உவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத்
    தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.  (4-65-8)

    திரண்ட பெரிய தோளினை உடைய திண்ணனார், ஒரு கையில் வளைந்த வில்லும், மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப் பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித்
    தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப் பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க, அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய, ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே, திண்ணனாரை மிகப் பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான்.

    The same is highlighted by Adisankara in Sivandalahari:

    Marga varthitha paduka pasupathe rangasya koorchayuthe,
    Gandoo shampoo nishechanam pura ripo divyabhishekaa yathe,
    Kinchid bhakshitha maams sesha kabalam navyopaharayathe,
    Bhakthi kim karoth yaho vana charo bhaktha vatam sayathe. 63

    The way faring sandals become the kusa crown of Pasupathi,
    The gargled mouthful of water become the holy water of bath ,
    To him who destroyed the three cities,
    The just tasted pieces of the remaining meat ,
    Become the holy offering to the Lord,
    And wonder of wonders,the hunter who lives in the forest
    Becomes the king of devotees.
    What is there in this world that devotion to the Lord cannot do?

    Thirumurais place devotion first and what they say on Vedas is as under

    Thirumandiram:

    வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்

    ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

    வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

    வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.






    (10-1-2-1)

    அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர்,
    `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது
    உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர
    வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும்
    வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும்,
    பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.

    வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்

    திசையுந் திசைபெறு தேவர் குழாமும்

    விசையம் பெருகிய வேதம் முதலாம்

    அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.
    (10-1-14-1)

    சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும்,
    நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற
    சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய
    வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.

    ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்

    போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்

    தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி

    தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
    (10-1-14-2)

    முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓது கின்ற அந்தணர், மறுமை நலம்
    வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத
    விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப
    அடைதலாகவே முடியும்.

    Thirmoolar Advises Andanars:

    அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்

    செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்

    தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்

    சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. (10-1-15-1)

    ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல்,
    ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக்
    கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை,
    நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா
    காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய
    அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து,
    வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய
    நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே
    அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.

    காயத் திரியே கருதுசா வித்திரி

    ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி

    நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்

    மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.






    (10-1-15-3)

    அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய்
    அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை
    காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின்
    வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து
    ஓர்தற்கு விரும்புவர்.

    பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து

    குருநெறி யாலுரை கூடிநால் வேதத்

    திருநெறி யான திருக்கை யிருத்திச்

    சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.(1--15-1-4)

    பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின்
    பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை
    உணர்ந்து, நான் காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய
    திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை
    நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர் - One who sees the Brahman is a Parppan.

    நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ

    நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்

    நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

    நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.






    (10-1-15-7)

    முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர்
    கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும்,
    சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச்
    செய்யுட்களே (Upanishads). நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே ( The Brahman) இதனை
    அறிந்துகொள்ளுங்கள்.
  • Dear Thiru Sankara Narayanan,

    This is an excellent article. I really admire your sincerity in explaining things in a casual way.
    My warm greetings

    Dhivakar
  • I should thank every one as this gave me an oppertunity to read Thirumurais fully.
  • Wonderful start Sankar sir. Well laid out. Will read the remaining parts and
    comment.
  • Excellent! Shankar,your interest and knowledge in Thirmurai and Siddhas is
    commendable.Your deep and broad views, presentation,comparative study...all
    create interest. Thank you.
    N.S

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters