Archeologicall findings @ Thirumurthy Dam
  • http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=1362

    *திருமூர்த்தி அணையில் புதைந்த வரலாற்று சின்னங்கள்* ஜூலை 12,2009,23:42 IST
    உடுமலை :திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், புதைந்து கிடக்கும்
    வரலாற்று சின்னங்கள் ஒவ்வொன்றாக வெளிப் பட துவங்கியுள்ளன. உடுமலை அருகேயுள்ள
    திருமூர்த்திமலை ஆதி மனிதர்கள், சமண துறவிகள், சித்தர்கள் வாழ்ந்ததற்கான
    பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன.சமணர்களின் முக்கிய வசிப்பிடமாக திருமூர்த்தி
    மலை இருந்துள்ளது. அவர் களை தொடர்ந்து, பாண்டிய மன்னர்கள் அடிவாரத்திலுள்ள
    அமணலிங்கஸ்வரர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ததற் கான சான்றுகளும் காணப்
    படுகின்றன.கோவிலில் உள்ள மண்டபத்தில், மன்னர்களின் மீன் சின்னம் பொறிக்
    கப்பட்டுள்ளது. மன்னர்களின் ஆளுகையின் கீழ் ஆட்சி செய்து வந்த தளி
    பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் திருமூர்த்திமலை இருந்ததற் கான வரலாற்று
    சான்றுகள் அதிகளவு காணப்படு கின்றன.ஜல்லிபட்டியில் இருந்து திருமூர்த்திமலைக்கு
    செல்ல தற்போது அணை இருக்கும் பகுதியில் மிகப் பெரிய வழித்தடம் இருந்ததாகவும்,
    நான்கு ரோடு சந்திப்பு இருந்ததாகவும் ஆதாரங்கள் உள்ளன. இப் பகுதியில்
    பாலாற்றின் மூலம் பயன்பெறும் மிகப் பெரிய குளம் இருந்ததற் கான சான்றுகளும்
    உள்ளன.முன்னோர்களின் சிலைகளை வைத்து வழிபடுவது பாளையக்காரர்களின் வழக்கமாக
    இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டபொம்மனுக்கு ஆதரவாக தளி
    பாளையக்காரர்கள் செயல் பட்டதால், ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்கு ஆளாகி,
    தளிபாளையம் அழிந்ததாக வரலாறு கூறுகிறது. பாளையக்காரர்களின் சிலைகள், கட்டுப்
    பாட்டிலிருந்த கிராமங்கள், அரண் மனை கட்டடங்களுடன் காணப்பட்டன. 1967ல்,
    பி.ஏ.பி., பாசன திட்டம் கொண்டு வரப்பட்டபோது திருமூர்த்தி அணை கட்டுமான பணி
    மேற்கொள்ளப் பட்டது. அணையின் எதிர்புறத் தில் இருக்கும் கூச்சிமலை அருகில்,
    தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளபட்ட போது, தளி பாளையக் காரர்களின் சிலைகள்
    கண்டறியப்பட்டன. நூற்றுக்கணக்கான பாளையக்காரர்களின் சிலைகளுடன் அவர்களின்
    வழிபாட்டு தெய்வமான ஜக்கம்மாள் சிலையும் கிடைத்தது. அப்போதைய பொதுபணித்துறை
    அதிகாரிகள் பழமையான சின்னங்களை பாதுகாக்கும் வகையில் காண்டூர் கால
  • INFORMATIVE AND INTERESTING.

    THANKS SATHEESH.

    SPS

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters