நான் கடந்தமாதம் சென்னையில் சிலநாட்கள் இருந்தபோது மனதுக்கினிய மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடன் சுமார் ஏழு மணிநேரம் தொடர்ந்து உரையாடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது மறக்கமுடியாத அந்த சந்தர்ப்பத்தை நான் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதையில் வரும் ஒரு இனிமையான பகுதியாகத்தான் இன்னமும் உணர்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் வந்த பலன் தான் இந்தப் பதிவு.
ஈழத்துத் தமிழறிஞர், கவிஞர், சமூக ஆர்வலர், ஐ.நா அலுவலர், எழுத்தாளர் என்று எத்தனையோ பன்முகங்கள் இந்த எழுபத்திரண்டு வயது இளைஞருக்கு. ஆனாலும் ஏகலிங்கத்துக்கான பெருமையாக ஒரு மிகப் பெரிய அருள்முகம் இவரிடம் உள்ளது. அதுதான் பன்னிரு திருமுறைகளை பார் முழுதும் பரப்புவதும், தமிழரல்லாத இதர மக்களிடம் திருமுறைகளை அவர்கள் மொழியிலேயே கொண்டுசென்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆன்மவழியில் அழைத்துச் செல்வதையும்தான் சொல்கிறேன்--