Dr U Ve Sa - En Sarithiram - 14 - Sadagopa Iyengaridam Katradhu
  • அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    (Yugadhi mattrum Vishuvaazhthukkalum kooda)

    Excerpts from autobiogrpahy of DrU Ve Sa - En Sarithiram ( tamil audio book - read by Sri)

    Youtube clip - please do listen and provide feeback - nandri

    http://youtu.be/uDzRtjnvev0

    முதல் முதலில் சடகோபையங்கார் தாம் இயற்றிய ஆலந்துறையீசர்
    பதிகத்தை எனக்குக் கற்பித்தார். அரியிலூரிலுள்ள சிவபெருமான் விஷயமாக
    அமைந்தது அது. சங்கீதத்திலும் அவர் இயற்றிய கீர்த்தனமொன்றையே முதலிற்
    ...சொல்லிவைத்தார்.

    “ரவிகுல தாமனே-யதுகுல சோமனே
    பரமபதி மாயனே-பாண்டவச காயனே”

    என்று ஆரம்பிப்பது அக்கீர்த்தனம்.

    அக்கீர்த்தனம் சகானா ராகத்தில் அமைந்தது, அவர் முதலில் சொல்லித்
    தந்த அக்கீர்த்தனத்தோடு அதன் இராகமும் என் மனத்தைக் கவர்ந்தது.
    அதுமுதலே அந்த ராகத்தில் எனக்கு விருப்பம் வளர்ந்து வந்தது. இன்றும்
    அந்த விருப்பம் இருந்து வருகிறது.
    ...
    “மகா தேவா மகா தேவா”

    என்ற பல்லவியை அவர் தொடங்கினார். மனத்தைப் பலவேறு
    திசைகளில் இழுத்துச் செல்லும் பொருள் அந்தப் பல்லவியில் இல்லை.
    இறைவன் திருநாமம் மாத்திரம் இருந்தது. வெறும் இராகத்தில் ஓர் இனிமை
    இருந்தாலும் அதில் தூய்மையான அந்த நாம சப்தத்தின் இணைப்பு அந்த
    இனிமைக்கும் ஓர் இனிமையை உண்டாக்கிற்று. சகானா ராகமும் மகாதேவ
    சப்தமும் வீணா கானத்தில் இழைந்து ஒன்றி மனத்தைச் சிவானந்த விலாசத்திற்
    பதிய வைத்தன. மேலும் அந்த வித்துவான்

    “சங்கர சங்கர சங்கர சங்கர
    சங்கர சங்கர சங்கர சங்கர
    மகா தேவா”

    என்பதைப் பக்தியில் தோய்ந்த உள்ளத்திலிருந்து உருகிவரும்
    இன்னிசையிலே எழுப்பினார். இராகமும் நாம சப்தமும் ஒருபடி உயர்ந்து
    நின்றன. சடகோபையங்கார் அந்த இன்பத்தில் ஊறி இசையும் பக்தியும் ஒன்றிக்
    கலந்த வெளியிலே சஞ்சாரம் செய்தார். அதிலிருந்து இறங்குவதற்குச் சிறிது
    நேரம் ஆயிற்று. கண்ணில் நீர் வர ஸாம்பையரை வணங்கினார்.

    அன்றைய அனுபவம் சடகோபையங்காரைச் சும்மா இருக்கவிடவில்லை.
    அந்தச் சகானா ராகமும் கீர்த்தனத்தின் மெட்டும் அவர் நினைவில் பசுமையாக
    நின்றன. அந்த மெட்டிலே அவரும் ஒரு கீர்த்தனம் பாடினார். அதுவே,
    “ரவிகுல தாமனே” என்ற பாட்டு

    Sri
    http://www.tamilaudiobooks.com/

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters