En Sarithiram - Remembering Tamil Thaatha - Dr. U Ve Sa's on his birthday Feb 19 audio
  • Wonderful Sri. Your service is great. You make us proud.
    Thanks a ton.
  • அன்புள்ளங்களே,
    உ.வே. சுவாமிநாதன் அவர்களை ஏன் தமிழ் தாத்தா என்று சொல்கிறார்கள்?இத்தனைக்கும் அவர் எழுத்தில் இளமை ஊஞ்சாலாடுகிறதே. அவரின் எழுத்தைப் பாருங்களேன்
    பிள்ளைகளுக்குள் பிச்சு என்று ஒருவன் இருந்தான். அவன் தகப்பனார் பணக்காரர். அதனால் அவனுக்குச் சிறிதுகர்வமும் தைரியமும் இருந்தன. உபாத்தியாயர் அடிக்கும்போது அவன் திருப்பிஅடிக்க முயல்வான். முரட்டுத்தனத்தினால் குழந்தைகளை அடக்கியாள்வதுகஷ்டமென்பதை அந்த உபாத்தியாயர் தெரிந்து கொள்ளவில்லை. அவருக்குஅவருடைய கைப்பிரம்பே செங்கோலாக இருந்தது. எல்லாப்
    பிள்ளைகளும்தம்முடைய தண்டனையை ஏற்றுக் கொள்ளும் போது பிச்சு மாத்திரம்எதிர்த்தால் அவர் சும்மா இருப்பாரா? மேலும் மேலும் கடுமையானதண்டனைகளை விதித்தார். அவன் சிறிதும் அடங்கவில்லை. பிறகு அவனைப்பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கி விட்டார். “அவன் பெற்ற விடுதலை நமக்கும்கிடைக்காதா?” என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு.பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு
    பிறகு படிப்பைப் பற்றி
    நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத்தவிர வேறுஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப்பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்ன? இராவிட்டால் என்ன?இவையா தாத்தா எழுத்துகள்? இளமையில் கற்க வேண்டும் அதுவும் அதிகப் பணம் இல்லாதவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்பதை எத்தனை அழகாக சொல்லியுள்ளார். எழுத்தில் இளமை துள்ளித்தான்
    விளையாடுகிறது. இந்த எழுத்துச் தெய்வத்தை தாத்தா என்று சொல்வது அநியாயம்.
    எழுத்துச் சிற்பிகளை தாத்தா, அவ்வை பாட்டி என்று பெருசுகளாகச் சொல்லி மனதை காயப்படுத்துகிறார்கள். இத்தனை அழகாக எழுதியவரையே தாத்தா என்று சொல்லி விட்டார்கள். என்னை, அனுஷா வையெல்லாம் என்ன சொல்வார்களோ?அன்புடன்டாக்டர் எல். கைலாசம்மலர்சோலை மங்கை, மணிமகுடம், கயல், முத்துச்சிப்பி ஆக்கியோன்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters