• தமிழக அரசு திரு. வி. க விருது இந்த முறை டாக்டர் திருமதி பிரேமா
    நந்தகுமாருக்கு அளிக்கப்படுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    சரஸ்வதி எனும் ஆங்கிலப் புத்தகத்தை எழுதியவர் (2002). பன்மொழி வல்லுநர்.
    பாரதி, அரவிந்தர், நம்மாழ்வார், ஆண்டாள், சேக்கிழார் இவர்கள் அனைவரும்
    சேர்ந்து வாழ்த்தும் அளவுக்கு இவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் மொழிமாற்றம்
    செய்தவர். ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் தெலுங்கு ‘அமுக்தமால்யதா’ வை ஆங்கிலத்தில்
    மொழி பெயர்த்தவர். இன்னும் நிறைய இருக்கிறது.

    எனக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று - ஒரு பேராசிரியர் ஒரே நாளில்
    காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை அவருக்கு நடக்கும் சம்பவங்களை ஒரு
    கதையாக எழுதியிருந்தார். ஒரே நாள்தான், வாழ்க்கையின் அத்தனை வகையான ருசிகளும்
    ரசங்களும் அனுபவித்த அனுபவம் புரியும்.

    அவரைப் பற்றிய என் வலைப்பூ
    http://vamsadhara.blogspot.in/2009/08/blog-post.html.

    என் தாய்க்குக் கிடைத்த பரிசு என்றால் மகிழ்ச்சி பொங்கத்தானே செய்யும். அந்த
    மகிழ்வின் பகிர்வு இது!

    அன்புடன்
    திவாகர்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters