ஏடு தந்தானடி இறைவன் - 5 (தில்லை மூவாயிரவரும் தேவாரமும்)
  • Friends,
    This is fifth part of the series on Thevaaram. This relates to Thillai
    Moovayiravar and Thevaram. Hope you will enjoy reading. Thanks and regards,
    http://vamsadhara.blogspot.in/2012/07/5.html

    *மேற்கோள் காட்டப் புகுந்தோமானால், புலையராகிய நந்தனாரும் உருத்திர
    பசுபதியாராகிய வேதியரும் இங்கே ஒருநிகர் ஆவர். நெடுமாறபாண்டியரும்,
    அதிபத்தரும் சமமானவர்கள். மங்கையர்க் கரசியாரும், இசைஞானியாரும் பெண்களின்
    பிரதிநிதிகள். அதி மேதையாகிய திருநாவுக்கரசரும், படிக்காத கண்ணப்பரும்
    சரிநிகர் சமானம்*
    (அருட்செல்வர் திரு நா. மகாலிங்கம் அவர்கள் திருமுறை அணிந்துரையிலிருந்து)

    ஆம். சிவபக்தர் என வரும்போது சிவனுக்கு அனைவருமே சமானவர்தாம். இந்தக் கூற்றில்
    எந்தப் பெரியோருக்கும் விவாத பேதமே கிடையாது. வரவும் செய்யாது.

    தில்லை மூவாயிரவர் பற்றி எழுதுமுன் தில்லையில் அந்த சிற்றம்பலத்தே தமிழ்
    எவ்வாறெல்லாம் சிறந்து விளங்குகிறது என ஒரு முறை மேலோட்டமாகப் பார்ப்போம்.

    திருச்சிற்றம்பலத்தான் தானே சுயமாக கேட்டு எழுதி வாங்கிய திருவாசகமும்
    திருக்கோவையும் முழுவதுமாகக் கிடைக்கப்பட்ட தலம் இது. தீந்தமிழ் பாடி
    தெய்வத்தோடு மானிடரையும் குளிர்வித்த மாணிக்கவாசகர் இறைவனோடு ஒன்று கலந்த இடம்
    தில்லையம்பலம். தமிழன்னையின் கூந்தலில் வைரக் கிரீடமாக ஜொலிக்கும்
    பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் தில்லையம்பலம். திருப்பல்லாண்டு பாடப்பட்ட
    சைவத்தலம் தில்லையம்பலம். சேரமான் பெருமான் பாடிய தமிழுக்கு ஒப்புதலாகவும்
    மீட்டும் இசையாகவும் சிலம்பொலி கேட்ட இடம் தில்லையம்பலம். பின்னாட்களில் வந்த
    முத்துத்தாண்டவர் பாடும் ஒவ்வொரு தமிழ்ப்பாடலுக்கும் இறைவன் கையால் பொற்காசு
    பெற்ற இடலம் தில்லையம்பலம். அதே முத்துதாண்டவர் தமிழ் பாடிய கையோடு அவனோடு
    கலந்த இடம் கூட இங்குதான். பெற்றான் சாம்பவன் எனும் தூய பக்தன் தன்
    முக்திக்காக இறைவனிடமிருந்து சிபாரிசு தமிழ் ஓலை பெற்ற இடமும்
    தில்லையம்பலம்தான். இப்படி தமிழோடு முற்றும் இணைந்து இன்பம் கொண்டாடும் இந்த
    தில்லையில் தேவார மூவர்களின் தொடர்பு எத்தகையது என்றால் சொல்லற்கரியதுதான்.
    http://vamsadhara.blogspot.in/2012/07/5.html

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters