Ganapati before Vatapi - 6
  • இந்த கணபதி வாதாபியிலிருந்து வந்தார். அதற்கு முன்பு தமிழ் நாட்டில் கணபதியே கிடையாது என்று கூறுபவர்கள், அதற்கு ஆதாரமாகக் கூறுவது இதுதான்.

    1. தமிழில் சங்க இலக்கியங்களிலோ அல்லது காப்பியங்களிலோ கணபதி பற்றிய குறிப்புகள் இல்லை.

    2. சிறு தொண்டரின் ஊர் திருச்செங்காட்டங்குடி. இதற்கு ஆதாரம் பெரிய புராணம்.

    உருநாட்டும் செயல்காமன்
    ஒழியவிழி பொழிசெந்தீ
    வருநாட்டத் திருநுதலார்
    மகிழ்ந்தருளும் பதிவயலில்
    கருநாட்டக் கடைசியர்தங்
    களிகாட்டுங் காவேரித்
    திருநாட்டு வளங்காட்டுஞ்
    செங்காட்டங் குடியாகும்நிலவியஅத் திருப்பதியில்
    நெடுஞ்சடையார் நீற்றடைவால்
    உலகில்வள ருயிர்க்கெல்லாம்
    உயர்காவல் தொழில்பூண்டு
    மலர்புகழ்மா மாத்திரர்தங்
    குலம்பெருக வந்துள்ளார்
    பலர்புகழுந் திருநாமம்
    பரஞ்சோதி யாரென்பார்

    3.சிறுதொண்டர் வாதாபிப் போரில் பங்கு பெற்றார். இதற்கு ஆதாரம் பெரிய புராணம்.

    மன்னவற்குத் தண்டுபோய்
    வடபுலத்து வாதாவித்
    தொன்னகரம் துகளாகத்
    துளைநெடுங்கை வரையுகைத்துப்


    4.அவர் வாதாபியிலிருந்து பல பொருட்களைக் கொண்டு வந்தார். இதற்கு ஆதாரம் பெரிய புராணம்.

    பன்மணியும் நிதிக்குவையும்
    பகட்டினமும் பரித்தொகையும்
    இன்னனஎண் ணிலகவர்ந்தே
    இகலரசன் முன்கொணர்ந்தார்

    5.திருச்செங்காட்டங்குடியில் இருக்கும் கணபதியின் பெயர் வாதாபிகணபதி.

    எனவே வாதாபிப் போருக்கு முன்பு தமிழ் நாட்டில் கணபதியே இல்லை.

    அதாவது சிறுதொண்டரும், திருஞான சம்பந்தருமாகச சேர்ந்து தமிழ்நாட்டில் கணபதி வழிபாட்டை நிறுவிவிட்டார்கள். ஒரு பேச்சுக்கு கணபதி வாதாபியில் இருந்துதான் வந்தார் என்றே வைத்துக் கொள்வோம்.சிறுத்தொண்டருக்கு முன்பு யாருமே தமிழ் நாட்டில் இருந்து வட நாட்டுக்கோ, இல்லை வட நாட்டில் இருந்து தமிழ் நாட்டுக்கோ வந்ததே இல்லை.என்று வைத்துக் கொண்டால்தான் கணபதி பற்றி தமிழ்
    நாட்டுக்குத் தெரியாது என்று கொள்ள முடியும்.தமிழ் நாட்டில் நடந்த வேள்விகளைப் பற்றி புறநானூறு,,சிலப்பதிகாரம் எனப் பல நூல்களில் குறிப்புகள் உள்ளன. அவை எல்லாம் கணபதி வழிபாடு இல்லாமல்தான் நடந்திருக்குமா? அதாவது வடநாட்டில் ஒரு மாதிரியாகவும்,தென் நாட்டில் ஒரு மாதிரியாகவும் நடந்தன என்று நம்ப வேண்டியதுதான்.

    பெரிய புராணம் சிறு தொண்டர் வாதாபியிலிருந்து கணபதியை எடுத்து வந்தார் என்று குறிப்பிடவே இல்லை.ஆனால் பெரிய புராணமே அப்பர் பெருமான் மகேந்திரன் காலத்திலேயே கணபதியை பாடியதைக் குறிப்பிடுகிறதே? ஆகப் பெரிய புராணத்தில் உள்ள நேர் குறிப்பை வீடுவிட்டு இல்லாத ஒன்றை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்?

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters