பராந்தக சோழன் காலத்து கோவில் இடிபாடு கண்டுபிடிப்பு!
  • மயிலாடுதுறை: தலைச்சங்காட்டில் தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழ்வாராச்சியில் பராந்தக சோழன் காலத்து கோவிலின் இடிபா டுகள், வட்ட எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுக்கள் மற்றும் சங்க கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள பூம்புகார் பன்டைய சோழர் காலத்து தலைநகராக இருந்த போது, பூம்புகார் நகரின் ஒரு பகுதியாக
    தலைச்சங்காடு என்ற ஊர் விளங்கியது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்பகுதியில் அவ்வப்போது முதுமக் கள் தாழி, உறை கிணறுகள் கிடைத்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தலைச்சங்காடு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் தரங்கம்பாடி டேனிஷ் கோட் டை காப்பாட்சியர் முத்துசாமி தலைமையில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகழ்வாராச்சி
    பணி களை நடத்தி வருகின்றனர். இந்த அகழ்வாராச்சியில் பன்டைய கோவிலின் சிதைந்த இடிபாடுகள் மற்றும் சிற்பங்கள் கிடைத்துள்ளன. அதில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் உள்ள வட்ட எழுத்துக்கள் மூலம் இவை கி.பி.,907 முதல் 954 வரையிலான பராந்தக சோழன் காலத்தை சார்ந்தது என தொல்லியல் துறை ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் சங்க காலத்தை சார்ந்த வியாபாரிகள் கழுத்தில் அணியும்
    கல் மணிகள், உறை கிணறுகளில் பயன்படுத்தப்பட்ட பல வடிவ செங்கற்கள், ஜாடிகள், கிண்ணங்கள், கிண்டிகள், சங்கு வளையல்கள் மற்றும் 18ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பூமியில் 12 அடி ஆழம் வரை தோண்டி நடத்தப்படும் அகழ்வாராச்சியில் 3 அடுக்குகளில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று
    வருகின்றன. இதன் மூலம் சங்க காலம் தொடங்கி நாயக்கர் காலத்து உண்மைக ளும், பழங்கால கோவிலும் அதன் மூலம் பல்வேறு சரித்திர உண்மைகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    http://temple.dinamalar.com/news_detail.php?id=3789

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters