Ramayanam before Kamban 78 - How long was Rama Ravana war?
  • ராம ராவண யுத்தம் எத்தனை நாட்கள் நடந்தன? தமிழ்நாட்டு வழக்குப்படி 18 மாதங்கள் என்று ஒரு கணக்கு.திரு மு ராகவ ஐயங்கார் அவர்கள் இது பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். அவரது கட்டுரையை தற்க்கால உரை நடையில் எடுத்து எழுதி உள்ளேன்.

    தமிழகத்தில் மூன்று போர்கள் இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அவை கிருத யுகத்தில் நடந்த தேவாசுர யுத்தம், திரேதா
    யுகத்தில் நடந்த ராம ராவண யுத்தம், த்வாபர யுகத்தில் நடந்த குருக்ஷேற்ற யுத்தம்.

    இதை கலிங்கத்துப் பரணி

    தேவாசுர ராமாயண மாபாரத முளவென்
    றோவாவுரை ஓயும்படி உளதப் பொருகளமே

    சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவனின்இமயப் படையெடுப்பை வர்ணிக்கும்போது, கீழ் வரும் செய்யுள்வரிகளில்

    கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
    இலங்கையில் எழுந்த சமரமும்,
    கடல்வணன்
    தேர் ஊர் செருவும், பாடி;

    கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் -கடலைக் கலக்கி அமிழ்தம் எடுத்தபின் நடந்த தேவாசுர யுத்தமும்


    கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் - இலங்கையில் நடந்த ராம ராவண யுத்தமும்


    கடல்வணன் தேர் ஊர் செருவும் - கடல் வண்ணனாகிய கண்ணன் தேரில் இருந்து நடத்திய, அதாவது குருக்ஷேற்ற யுத்தமும்,

    இந்த மூன்று யுத்தங்களும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிற்றுக் கூறப் படுகின்றன.


    அவை எத்தனை நாட்களுக்கு நடந்தன?

    கீழ் வரும் சிலப்பதிகார செய்யுளில் இது குறித்து வரும் வரிகளில் அறியலாம்.



    27. நீர்ப்படைக் காதை







    வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்

    கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,

    சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்

    கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,

    செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் 5

    அறியாது மலைந்த ஆரிய மன்னரை,

    செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக

    உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,

    யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,

    ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள; 10

    வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,

    ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட

    செங்குட்டுவன்


    செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக


    உயிர்த் தொகை உண்ட - யமனின் தொழில் நன்கு பெருகுமாறு, எராளமான உயிர்களை அவன் உண்ணுமாறு ஏற்ப்பட்டபோர்களான

    ஒன்பதிற்று இரட்டி என்று -இரண்டு ஒன்பது , அதாவது 18

    யாண்டும், மதியும், நாளும், கடிகையும் - ஆண்டும், மதியும்( அதாவது மாதமும்), நாட்களும், நாழிகையும்

    18 நாட்கள் நடந்த போர் , மகாபாரத யுத்தம் நம் அனைவருக்கும்
    தெரியும். 18 நாழிகை நடந்த போர் இவைகளுக்கு ஒப்பாக செங்குட்டுவன் நடத்திய போர். உரை ஆசிரியர்கள் குறிப்புகளின்படி 18 ஆண்டு நடந்தது தமிழ் இலக்கியங்கள் பாடும் தேவாசுர யுத்தம். 18 மாதம் நடந்தது ராம ராவண யுத்தம்.

    தமிழ் நாட்டில் ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்ததாகக் கூறும் ஒரு மரபு சிலப்பதிகார காலத்திலயே இருந்திருக்கிறது.

    திரு மு ராகவ ஐயங்கார்
    அவர்கள் இது பற்றி ஆராய்ந்து, கீழ் வரும் கம்ப ராமாயணப் பாடலைக் குறிப்பிட்டு ,இப்பாடலின் பொருளாவது சூர்பனகை மூக்கை அறிந்ததில் தொடங்கிய போர், ராவணன் சிரத்தை அறுத்ததில் முடிந்தது என்பதாம். எனவே இதைக் கணக்கிட்டு தமிழர்கள் 18 மாதப் போராகக் கூறி இருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.

    (கம்ப ராமாயணம் - சூரபனகைப்
    படலம்)
    கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின், அக் கொடியாள்
    முலை துமித்து, உயர் மூக்கினை நீக்கிய மூத்தம்,
    மலை துமித்தென, இராவணன் மணியுடை மகுடத்
    தலை துமித்தற்கு நாள் கொண்டது, ஒத்தது, ஒர் தன்மை

    தமிழ்நாட்டில் ராமாயணம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதற்கு இன்னும் ஓர் சான்று.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters