சீடை தின்ற கண்ணன்
  • தமிழ் நாட்டில், கண்ணன் பிறந்த நாளில் நாம் செய்யும் பல தின் பண்டங்கள் சற்று மாறுபட்டவை.

    அதிலும் இந்த சீடை, அப்பம், நாவல் பழம், அக்கார அடிசில் முதலானவை தமிழ் நாட்டிலும் . ஆந்திரத்தின் சில பகுதிகளில் மட்டுமே செய்யப் படுகின்றன.

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனுக்குத் தந்த, கண்ணன் உண்டதாகக் கூறும் பல தின் பண்டங்களை நாம் இன்றும் கண்ணன் பிறந்த நாளில், கண்ணனுக்குப் படையல் செய்கிறோம். கருப்பு எள் உருண்டை மட்டும் விட்டு விட்டோம்.
    .
    இந்த சீடைப் படையல் 1100 ஆண்டுக்கும் மேற்ப்பட்ட பழமையானது. இந்த மரபைப் பேணுவோமாக.

    பெரியாழ்வார் பாசுரங்கள் சில.

    இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்


    இனியபலாப்பழம்தந்து

    சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்

    சோத்தம்பிரான். இங்கேவாராய்

    பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்


    பிரானே. திரியிடவொட்டில்

    வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்

    விட்டுவே. நீஇங்கேவாராய்

    நாவற்பழம்கொண்டுவைத்தேன்


    இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச்

    சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட

    தாமோதரா. இங்கேவாராய்

    அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து

    சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ.

    செந்நெலரிசிசிறுபருப்புச்


    செய்த அக்காரம்நறுநெய்பாலால்

    பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்

    பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்

    இன்னமுகப்பன்நானென்றுசொல்லி

    எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்

    கன்னலிலட்டுவத்தோடுசீடை


    காரெள்ளினுண்டைகலத்திலிட்டு

    என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்

    இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்

    பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்

    பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்

    சொல்லிலரசிப்படுதிநங்காய்.


    சுழலுடையன்உன்பிள்ளைதானே

    இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்

    கையில்வளையைக்கழற்றிக்கொண்டு

    கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற

    அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து

    நல்லனநாவற்பழங்கள்கொண்டு

    நானல்லேனென்றுசிரிக்கின்றானே.
  • Wonderful. Thanks Sankar for sharing. Good to know that these eatbales are
    in practice for more than 1000 years.
  • Looks we changed karuupu el urundai (காரெள்ளினுண்டை)to vellacheedai as el urundai was later associated with davasam ( pitru ceremonies)
  • கடந்த கிருஷ்ணா ஜெயந்தியின்போது பிரசுரிக்கப்பட்ட என் கட்டுரை. இந்த ஆண்டு சற்று விரிவாக எழுதியுள்ளேன்.















    தமிழ் நாட்டில், கண்ணன் பிறந்த நாளில் நாம் செய்யும் பல தின் பண்டங்கள் சற்று மாறுபட்டவை.

    அதிலும் இந்த சீடை, அப்பம், நாவல் பழம், அக்கார அடிசில் முதலானவை தமிழ் நாட்டிலும் . ஆந்திரத்தின் சில பகுதிகளில் மட்டுமே செய்யப் படுகின்றன.

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனுக்குத் தந்த, கண்ணன் உண்டதாகக் கூறும் பல தின் பண்டங்களை நாம் இன்றும் கண்ணன் பிறந்த நாளில், கண்ணனுக்குப் படையல் செய்கிறோம். கருப்பு எள் உருண்டை மட்டும் விட்டு விட்டோம்.
    .
    இந்த சீடைப் படையல் 1100 ஆண்டுக்கும் மேற்ப்பட்ட பழமையானது. இந்த மரபைப் பேணுவோமாக.

    பெரியாழ்வார் பாசுரங்கள் சில.

    இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்



    இனியபலாப்பழம்தந்து
    சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்

    சோத்தம்பிரான். இங்கேவாராய்

    பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்



    பிரானே. திரியிடவொட்டில்
    வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்

    விட்டுவே. நீஇங்கேவாராய்

    நாவற்பழம்கொண்டுவைத்தேன்



    இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச்
    சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட

    தாமோதரா. இங்கேவாராய்

    அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
    சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ.

    செந்நெலரிசிசிறுபருப்புச்

    செய்த அக்காரம்நறுநெய்பாலால்
    பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்

    பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
    இன்னமுகப்பன்நானென்றுசொல்லி

    எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்

    கன்னலிலட்டுவத்தோடுசீடை

    காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
    என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்

    இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
    பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்

    பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
    சொல்லிலரசிப்படுதிநங்காய்.

    கண்ணன் மீது ஒரு தாய் கூறும் புகார். யசோதையே உன் மகன் என் வீட்டில் புகுந்து,என் மகளுக்கு "வா நாவற்பழம் வாங்கித் தருகிறேன் " என்று கூட்டிச் சென்று,கொல்லையில் நாவற்பழம் விற்கும் பெண்ணிடம் என் மகளின் கை வளையல்களைக் கழற்றித் தண்டு நாவற்பழம் வாங்கித் தின்றுவிட்டு, நான் ஒண்ணுமே பண்ணலே என்று சாதிக்கிறான்.



    சுழலுடையன்உன்பிள்ளைதானே
    இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்

    கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
    கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற

    அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
    நல்லனநாவற்பழங்கள்கொண்டு

    நானல்லேனென்றுசிரிக்கின்றானே.

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters