அழிவை நோக்கி சிற்பக்கலை தொழில்
  • http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Erode#205213
    1.அழிவை நோக்கி சிற்பக்கலை தொழில் கோபிசெட்டிபாளையம்: கல்லையும் கையெடுத்து
    கும்பிடும் வகையில் கல்லுக்கு உயிர் கொடுத்த சிற்பக்கலை தொழில் மெல்ல மெல்ல
    நலிந்து வருகிறது. இந்தியாவின் புகழை இன்றளவும் வெளிநாடுகளில் பறைசாற்றி வரும்
    கல் சிற்ப கலை தொழிலை காப்பாற்ற இளைய தலைமுறைக்கு போதிய பயிற்சி அளிக்க
    வேண்டியது அவசியம். மன்னர்கள் காலத்தில் இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும்
    ஏராளமான கோவில்கள், மண்டபங்கள், நினைவு சின்னங்கள் போன்றவை கற்களால்
    எழுப்பப்பட்டன. தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர்
    உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் ஏராளமான கோவில்கள் கல் சிற்ப கலைகளால் கட்டப்பட்டு
    கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. தஞ்சாவூர் கோவிலில் ராஜராஜ சோழன் காலத்தில்
    கட்டப்பட்ட கல் "நந்தி' சிலையை கண்டால் உடலில் ஒருவித ஈர்ப்பு சக்தி ஏற்படுவதை
    உணர முடியும். சென்னை மாமல்லபுரம் பகுதியில் உள்ள கல் சிற்பங்களை காண
    வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மன்னர் காலத்தில்
    பெரும் புகழோடு இருந்த கல் சிற்ப கலைஞர்கள் நாளைடைவில் பின்னுக்கு
    தள்ளப்பட்டனர். சுதந்திரத்துக்கு பிறகு கல் சிற்பங்கள் மூலம் கோவில்கள் மற்றும்
    கட்டிடங்கள் கட்டுவது குறைந்தது. கல் சிற்ப தொழிலாளர் பலர் வேலையிழந்து மாற்று
    தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது குறைந்தளவே தொழிலாளர்கள் கல் சிற்ப
    தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கோபி குதிரை வண்டி சாலையில் பத்துக்கும்
    மேற்பட்ட கல் சிற்ப கூடங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக கட்டப்பட்டு
    வரும் கோவில்களுக்கு கருவறை, ஸ்வாமி சிலைகள், சிறிய அளவிலான எலி, நந்தி,
    சிங்கம் மற்றும் புலி உள்ளிட்ட சிலைகள் மட்டுமே செய்யப்படுகிறது. பெரிய அளவிலான
    கல் சிற்பங்களுக்கு போதிய ஆர்டர் இல்லாததால் குறைந்தளவே தொழிலாளர் ஈடுபட்டு
    வருகின்றனர். கோபியில் செய்யப்படும் கல் சிற்பங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு
    செல்கிறது. கல் சிற்ப தொழிலாளர்கள் கூறியதாவது: கல் சிற்ப தொழில் வெகுவாக
    நசிந்து வருகிறது. 50க்கும் குறைவான தொழிலாளர்களே கோபியில் உள்ளனர். இரண்டு அடி
    உயரம் க

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters